Breaking

புகழ்பெற்ற இந்திய அணுவிஞ்ஞானி அனில் காகோட்கர் பற்றிய தொகுப்பு..


அனில் காகோட்கர் 

புகழ்பெற்ற இந்திய அணுவிஞ்ஞானி அனில் காகோட்கர் 1943 ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம் நாள் மத்தியபிரதேசத்தில் உள்ள பர்வானியில் பிறந்தார். இவரது பெற்றோர் கமலா காகோட்கர் மற்றும் புருசோத்தம் காகோட்கர் ஆவர். 


இவர் பள்ளிப்படிப்பை பர்வானி மற்றும் மும்பையில் முடித்தார். கல்லூரிப்படிப்பை மும்பை ரூபாரேல் கல்லூரியில் பயின்றார். மேலும் 1963 ல் பொறியியலில் இயந்திரவியல் பிரிவில் பட்டம் பெறுவதற்காக மும்பை வீரமாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்தார். அனில் காகோட்கர் 1964 ல் மும்பை பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தில் சேர்ந்தார்.


அவர் பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தில் உலை பொறியியல் பிரிவில் சேர்ந்தார். மற்றும் முற்றிலும் உயர் தொழில்நுட்ப திட்டமான துருவா உலை வடிவமைப்பிலும் கட்டுமானத்திலும் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.கல்பாக்கம் மற்றும் ராவத்பாட்டாவில் உள்ள முதல் அலகு ஆகிய இரண்டு அணு உலைகளைப் புணரமைத்ததில் இவரது பங்கு மகத்தானது. 1974 முதல் 1998 வரை சமாதான ரீதியிலான அணு சோதனைகளை மேற்கொண்ட இந்திய விஞ்ஞானிகள் குழுவின் முக்கிய அங்கமாக திகழ்ந்தார்.

1996 ஆம் ஆண்டில் அவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராகவும், 2000 ஆம் ஆண்டு முதல் 2009 இந்திய அணு சக்தி ஆணையத்தின் செயலாளராகவும் இருந்தார். 250 க்கும் மேற்பட்ட விஞ்ஞான ஆவணங்களை அவர் வெளியிட்டுள்ளார். குறிப்பாக இந்தியாவின் மலிவான தோரியம் வளங்களைப் அணி ஆற்றலுக்கான எரிபொருளாக பயன்படுத்துவது பற்றி பேசி வருகிறார். அவர் மேம்பட்ட கன நீர் உலை வடிவமைப்பதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

விருதுகள் 

பத்மஸ்ரீ விருது (1998)
பத்ம பூசன் (1999)
பத்ம விபூசன் (2009)

No comments:

Powered by Blogger.