Breaking

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை-டாக்டர். வர்கீஸ் குரியன் பிறந்த நாள்.

                                  

நவம்பர்-26.

இந்திய
வெண்மைப் புரட்சியின் 
தந்தை-டாக்டர். வர்கீஸ் குரியன் பிறந்த நாள்.

பிறப்பு:-

நவம்பர்-26, 1921ஆம் ஆண்டு, கோழிக்கோடு, கேரளாவில் பிறந்தார். கோபி செட்டிபாளயத்திலுள்ள 
டயமண்ட் ஜூப்லி மேனிலைப்பள்ளியில்
பள்ளிப்படிப்பை படித்தார். பிறகு, சென்னை 
லயோலாக் கல்லூரியில் 
1940 ஆம் ஆண்டு 
இயற்பியலில் 
இளங்கலைப்
பட்டம் பெற்றார். பின்னர் சென்னைப் பல்கலைக்கழகத்தில்
இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். 
1946 ஆம் ஆண்டு ஜாம்ஷெட்பூரில் 
உள்ள டாடா எஃகு தொழில்
நுட்ப நிலையத்தில் பட்டமேற்படிப்பை முடித்தார். பின்னர் அரசு உதவித்தொகையில் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் படித்து இயந்திரவியல் பொறியியலில் எம்.எஸ் பட்டத்தை சிறப்பு நிலையில் பெற்றார்.

பணிகள்:-

1949 ஆம் ஆண்டு,
கெய்ரா மாவட்டத்தில் ஆனந்த் என்னும் ஊரில் இருந்த பால் பண்ணைக்கு இன்ஜினீயராக பணியாற்றினார்.

கண்டுபிடிப்புகள்:- 

விவசாயிகளின் நலனுக்காக தனது அரசுப்பணியை ராஜினாமா செய்தார். 
விவசாயிகள் அனைவரையும் அழைத்து பேசினார். "அமுல்' என்ற கூட்டுறவு பால்விற்பனை நிறுவனம் ஒன்றை தொடங்கினார். இவ்வாறு இந்தியாவில் முதன்முதலாக கூட்டுறவு சொசைட்டி துவக்க காரணமாக இருந்தார்.
ஆனந்தில் இருந்தவை எருமை மாடுகள் ஆகும். பசுமாட்டு பாலிலிருந்து மட்டுமே பவுடர் தயாரிக்க முடியும், கொழுப்புச் சத்து அதிகமான எருமை மாட்டு பாலிலிருந்து முடியாது என்பதை மாற்றி பால் பவுடர், வெண்ணெய் ஆகியவை தயாரிக்கப்பட்டன.  பிறகு அமுல் குழந்தைகள் உணவை அறிமுகம் செய்தது. 
1964 ஆம் ஆண்டு பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆனந்த் வந்தார். கிராமங்களின் முன்னேற்றம் கண்டு பிரமித்தார். இதே புரட்சியை நாடு முழுக்க நடத்திக் காட்டுமாறு  கேட்டுக்கொண்டார். இதற்காக, 1965 இல் குரியன் தலைமையில் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் (National Dairy Development Board) என்னும் அமைப்பை மத்திய அரசாங்கம் உருவாக்கியது. Operation Flood என்னும் பெயரில் குரியன் பால் உற்பத்தியை உபரியாக்கும் கனவைத் தொடங்கினார். தன் செயல்பாடுகளை இந்தியா முழுக்க விரிவாக்கினார். 1997 ஆம் ஆண்டு உலகில் அதிகமான பால் உற்பத்தி செய்த நாடாக  இந்தியாவை மாற்றினார்.
ஆனந்த் மாதிரியைக் கொண்ட கூட்டுறவு பால் பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தை நவீனப்படுத்த உதவியும், இந்தியாவின் வெண்புரட்சியை வழி நடத்தினார்.
மேலும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பால் உற்பத்தி கூட்டுறவு நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அவை...
மகாராஷ்டிரா -ஆரே,
கர்நாடகா - நந்தினி,
ராஜஸ்தான் - சரஸ்,
பீகார் - சுதா,
தமிழ்நாடு - ஆவின் ஆகும்.
மேலும்  சமையல் எண்ணெய்களில் மாற்றம் செய்தார். அதுவரை தென்னிந்தியர்கள் சமையலுக்கு கடலை எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவற்றையும், வட இந்தியர்கள் கடுகு எண்ணெயும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் அவற்றின் உற்பத்தி, பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப போதுமானதாக இல்லை.
எனவே இந்தியர்கள் சூரியகாந்தி எண்ணெய, பனை எண்ணெய் ஆகியவற்றை உணவில் பயன்படுத்தலாம் என்று இந்திய உணவு பாதுகாப்பு கழகத்திற்கு அறிவுரை வழங்கினார். 
பின்னர்  இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டது.

இவர் ஆலோசனை வழங்கிய நாடுகள்:-

1979 ஆம் ஆண்டு ரஷ்யாவிற்கும், 1982 ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கும் சென்றார். பாகிஸ்தானில் உள்ள கூட்டுறவு பால் விற்பனை நிறுவனம் இவரால் தொடங்கப்பட்டது ஆகும். 1989ஆம் ஆண்டு சீனாவிற்கும்,1997ஆம் ஆண்டு இலங்கைக்கும் சென்ற இவர் அந்நாடுகளில் கூட்டுறவு பால் விற்பனை நிறுவனங்களை துவக்கி வைத்தார்.

பதவி:-

குஜராத் கூட்டுறவு பால் விற்பனைக் கூட்டமைப்பின்
(GCMMF) தலைவராக இருந்தார். 

விருதுகள்:-

1963-ரமன் மக்சேசே பரிசு,
1965-பத்மசிறீ,
1966-பத்ம பூசண்,
1986-கிருஷி ரத்னா விருது (இந்திய குடியரசுத் தலைவரிடமிருந்து),
1986-வாடேலர் அமைதிப் பரிசு (கார்னெகி நிறுவனம்),
1989-உலக உணவுப் பரிசு,
1993-ஆண்டின் பன்னாட்டு மனிதர் - உலக பால்பண்ணை கண்காட்சி, மாடிசன், ஐக்கிய அமெரிக்கா விருது,
1999-பத்ம விபூசண்,
2007-கரம்வீர் புரஸ்கார் விருது,

நூல்கள்:-

ஒரு கனவு இருந்தது' (I too had a dream) என்ற தலைப்பில் இவர் நூலை எழுதினார்.

இறப்பு:-

பால், தயிர், வெண்ணெய், சீஸ், குழந்தை உணவுகள் தாராளமாகக் கிடைக்க காரணமான,
இந்தியாவின் பால்க்காரர் என அழைக்கப்பட்ட இவர், செப்டம்பர்-09, 2012 ஆம் ஆண்டு
நாடியாத், குஜராத்தில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.