Breaking

இன்றைக்கு உலகத்தில்... அறிவாளிகளைவிட புத்திசாலிகளே அதிகம் தேவைப்படுகிறார்கள்..!

இன்றைக்கு உலகத்தில்... அறிவாளிகளைவிட புத்திசாலிகளே
அதிகம் தேவைப்படுகிறார்கள்..!


நள்ளிரவு நேரம்.. காட்டின் நடுவே ஒருவன் நடந்து போய்க் கொண்டிருந்தான்..
எதிரே இரண்டு பேர் திடீரென்று வந்து
நின்றார்கள்.. அவனை வழிமறித்தார்கள்..

*என்ன வெச்சிருக்கே? எடு மாரியாதையா..!* என்று மிரட்டினார்கள்..

_*முடியாது..!*_ என்றான்..

முரடர்கள் இருவரும் அவனைப் பிடித்துக் கீழே தள்ளிச் சண்டை போட ஆரம்பித்தார்கள்.. அவனும் இவர்களை எதிர்த்துக்கடுமையாகச் சண்டை போட்டான்.. கட்டிப் புரண்டார்கள்..
கடைசியில் அவன் சட்டைப்பையில் இருந்த பணப்பையைப் பறிமுதல் செய்தார்கள்.. உள்ளே எவ்வளவு பணம் இருக்கிறது என்று ஒருவன் ஆராய்ந்தான்.. எடுத்து எண்ணிப் பார்த்தான்.. முப்பது ரூபாய் இருந்தது..

*அடப்பாவி.. இவ்வளவுதானா? இந்த முப்பது ரூபாயைக் காப்பாத்தறதுக்காகவா இவ்வளவு கடுமையாக எங்களோட சண்டை போட்டே.? ஒரு வேளை நூறு ரூபாய் உன்கிட்டே இருந்திருந்தா எங்க ரெண்டு பேரையும் கையை காலை முறிச்சிருப்பே போல இருக்கு..*
என்றார்கள் அந்தக் கொள்ளையர்கள்..

கீழே கிடந்த அவன் மெல்ல எழுந்து நின்றான்.. தன் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணையெல்லாம் தட்டிவிட்டான்.. பிறகு சொன்னான்
_*நான் ஒன்றும் அந்த வெறும் முப்பது ரூபாய்க்காக உங்ககூட சண்டை போடலே..!*_

*பின்னே..?*

_*ஏற்கெனவே என் இடுப்பிலே பத்திரமா கட்டி வெச்சிருக்கேனே 500 ரூபாய்... அதைக் காப்பாத்தறதுக்காகத்தான் அவ்வளவு கடுமையா சண்டை போட்டேன்..!*_

இதற்குப் பிறகு அங்கே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்ல வேண்டிய அவசியமில்லை..

சா.அதி என்பவர் சொல்கிறார் _எவ்வளவுதான் விஞ்ஞானம் படித்தாலும் புத்திசாலித்தனத்துடன் நடக்காவிட்டால், மூடர்களே ஆவார்கள்.._

மூடனிடம், *'மௌனமாக இரு..!'* என்பதைவிட உயர்ந்த உபதேசம்
வேறொன்றும் இல்லை..

அதன் தன்மையை அறிந்துவிட்டால் அவன் மூடனாக இருக்க மாட்டான்..
_பொய் சொல்லுவது என்பது வேறு; உண்மையை மறைப்பது என்பது வேறு.._
ஒரு நன்மை நடக்கப் போகிறது என்றால், அதற்காக ஒரு பொய்
சொல்வதில் ஒன்றும் தவறில்லை என்பது பெரியவர்கள் அறிவுரை..
ஒரு கெடுதல் நடக்கப்போகிறது என்றால், அதைத் தவிர்ப்பதற்காக
ஓர் உண்மையைக்கூட மறைக்கலாம். அதிலும் தவறு ஒன்றுமில்லை..

நாம் பேசுவது பொய்யா... மெய்யா என்பதைவிட நம்முடைய பேச்சினால் விளையப் போவது நன்மையா, தீமையா என்பதுதான்
முக்கியம்..!

உண்மையைப் பேச வேண்டுமென்று நினைக்கிறவன் அறிவாளி..!
உண்மையை எப்போது - எந்த நேரத்தில் பேச வேண்டும் என்பதையும்
தெரிந்து வைத்திருக்கிறவன் புத்திசாலி..!

இன்றைக்கு உலகத்தில்... அறிவாளிகளைவிட புத்திசாலிகளே
அதிகம் தேவைப்படுகிறார்கள்..!

No comments:

Powered by Blogger.