திருமணம் பற்றி ஓஷோ..!! கருத்துகள்
திருமணம் பற்றி ஓஷோ..!!
கல்யாணம் செய்து கொண்டு சுதந்திரமாகவும் இருப்பதென்பது சாத்தியமா?
கடினம் தான்..
ஆனால் அசாத்தியமானதல்ல.
சற்றே புரிந்து கொள்ளும் திறன் இருந்தால் போதும்.
சில அடிப்படை உண்மைகளை முதலில் அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். ஒன்று இன்னாருக்கு இன்னார் என்று யாரும் யாருக்காகவும் பிறக்கவில்லை.
இரண்டாவது இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உங்களின் கோட்பாடுகளை நிறைவேற்றுவதற்காக யாரும் இங்கு வரவில்லை.
மூன்றாவது உங்கள் அன்புக்கு நீங்கள்தான் அதிகாரி.
எனவே நீங்கள் விரும்பும் வரை வழங்க முடியும்.
ஆனால் மற்றவர்களிடமிருந்து அன்பை நீங்கள் வற்புறுத்தி பெற முடியாது.
ஏனெனில் மற்றவர் உங்கள் அடிமையல்ல.
இந்த எளிய உண்மைகளை புரிந்து கொண்டால் நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தாலும் ஆகாதவராக இருந்தாலும் சேர்ந்திருக்க முடியும்.
ஒருவருக்கொருவர் விட்டுத் தர முடியும்.
ஒருவர் மற்றவரின் தனித்தன்மையில் ஒருபோதும் குறுக்கிடாதிருக்கமுடியும்.
உண்மையில் கல்யாணம் என்பது காலாவதியாகிப்போன ஒரு நிறுவனம்.
முதலாவதாக, எந்த நிறுவனத்தின் உள்ளேயும் வாழ்வது நல்லதல்ல.
எந்த விதமான அமைப்பும் அறிவுபூர்வமானதே.
கோடிக்கணக்கான மக்களின் மகிழ்ச்சிக்கான எல்லா சாத்தியங்களையும் திருமணமானது ஏறக்குறைய அழித்து விட்டிருக்கிறது.
முற்றிலும் பயனற்ற காரணங்களுக்காக.
எனவே முதல் விஷயமே, திருமணமே – திருமண சடங்கே கூட – போலித்தனமானதுதான்.
திருமணத்தை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டால் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும்.
வினையாக எடுத்துக் கொண்டால் சுதந்திரம் சாத்தியமேயில்லை.
திருமணத்தை விளையாட்டாக எடுத்துக் கொள்ளுங்கள் –
அது ஒரு விளையாட்டுத்தான்.
கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் பாருங்கள்.
வாழ்க்கை மேடையில் நீங்கள் நடிக்கும் பாத்திரமே திருமண வாழ்க்கை.
ஆனால் அது வாழ்க்கையின் ஒரு அங்கமல்ல.
அதற்கு எந்த வித யதார்த்தமும் கிடையாது.
அது ஒரு கட்டுக்கதை.
ஆனால் கட்டுக்கதையையே யதார்த்தம் என்று எடுத்துக் கொள்ளுமளவுக்கு மக்கள் மூடர்களாக இருக்கிறார்கள்.
🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋
No comments: