Breaking

அறிவியல் மேதை - மேரி கியூரி அம்மையார் பிறந்த நாள்..


அறிவியல் மேதை - மேரி கியூரி அம்மையார் பிறந்த நாள்

இன்று, 1867
உலகின் ஆக உயரிய கெளரமாக கருதப்படும் நோபல் பரிசை ஒரு முறை வெல்வதே அரிது. அதன் நூறாண்டு கால வரலாற்றில் முதன்முறையாக நோபல் பரிசை இரண்டு முறை வென்றார் ஒருவர். 

அதுவும் வெவ்வேறு துறைகளில், அந்தச் சாதனையை நிகழ்த்தினார் ஒரு பெண் என்பதே அந்தச் சாதனைக்கு மென்மேலும் சிறப்பு சேர்க்கிறது. ரேடியத்தையும், இயற்கையான கதிரியக்கத்தையும் கண்டுபிடித்ததற்காக கியூரி தம்பதிகளுக்கு 1903 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முதல் நோபல் பரிசை வென்ற எட்டே ஆண்டுகளில் அதாவது 1911 ஆம் ஆண்டில் மேரி கியூரிக்கு இரண்டாவது நோபல் பரிசை வழங்கி கெளரவித்தது நோபல் குழு. இம்முறை ரேடியத்தின் அணு எடையை அளக்கும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வேதியியல் துறையில் விருது வழங்கப்பட்டது

No comments:

Powered by Blogger.