Breaking

இந்திய அரசியல் சாசன தினம்/இந்திய அரசியலமைப்பு நாள். (Constitution Day Of India)


நவம்பர்-26.

இந்திய அரசியல் சாசன தினம்/இந்திய அரசியலமைப்பு நாள்.
(Constitution Day Of India)  

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக் குழுவின் தலைவராக செயல்பட்ட டாக்டர், அம்பேத்கர் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரது உழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும், இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர்-26 ஆம் தேதி, அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

வரலாறு:-

"1946 டிசம்பர் 6. அரசியல் சாசன நிர்ணய சபை முதன்முறையாகக் கூடியது. 29 ஆகஸ்ட் 1947 அரசியல் சாசன வரைவுக் கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. 7635 திருத்தங்கள் கமிட்டி முன் கொண்டு வரப்பட்டு, 2473 ஏற்றுக் கொள்ளப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள்; 8 அட்டவணைகள் கொண்டுள்ளது".

1949ஆம் ஆண்டு நவம்பர் 25 அன்று காலை பத்து மணிக்கு, 'இந்திய அரசுச் சட்டம் 1935-ன் திருத்த மசோதா', சாசன வரைவுக் கமிட்டியின் தலைவர் அம்பேத்கர் அவர்களால் அரசியல் நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமை வகித்தார்.

அனைவருக்கும் வாக்குரிமை, மத்திய அரசின் அதிகார வரம்பு, நீதிமன்றங்களின் அதிகாரம், பசு வதை தடுப்பு, மது விலக்கு... என்று பல அம்சங்கள் முன்வைக்கப் பட்டன.

பாசாஹிப் டாக்டர் அம்பேத்கார் கூறிய இந்த வாசகம்:

"இந்த சாசனத்தின் தரத் தகுதிக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஏனெனில், என்னதான் நல்ல சாசனமாக இருந்தாலும், அதனைக் கையாள்வோர் தீயவராக இருந்தால் தீயதே விளையும்; சாசனம் எத்தன்மையதாய் இருப்பினும், அது நல்லவர் கைகளில் நன்மையே விளைவிக்கும்".

1949 நவம்பர் 26 சனிக்கிழமை. 395 பிரிவுகள், 8 அட்டவணைகளுடன் இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

No comments:

Powered by Blogger.