Breaking

டிசம்பர் -03. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் பிறந்த நாள்.



டிசம்பர் -03. இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் பிறந்த நாள்.

டிசம்பர் -03, 1884 ஆம் ஆண்டு பிறந்தார். சுதந்திர போராட்ட வீரராகவும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்.1946ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.1947ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் புதிய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, 1950ம் ஆண்டு இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகப் பதவியேற்றார் இராசேந்திர பிரசாத். 1952, 1957 ஆகிய ஆண்டுகளில் இரண்டு முறை குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற ஒரே குடியரசுத் தலைவரான இராஜேந்திரப் பிரசாத் 1962ம் ஆண்டு வரை பதவியிலிருந்து, பின் ஓய்வு பெற்றார்.

இந்திய குடியரசு தலைவர்கள் வரலாற்றில் அப்பதவியை இரண்டுமுறை அலங்கரித்த ஒரே குடியரசுத் தலைவர் என்ற பெருமையும் பெற்றார்.இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது வழங்கப்பட்டது.டாக்டர் இராஜேந்திர பிரசாத் 1963ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் நாள் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.