Breaking

டிசம்பர் - 03. தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர் அநுத்தமா நினைவு நாள்.டிசம்பர் - 03. தமிழ் இலக்கியம் வளர்த்த பெண் எழுத்தாளர்
அநுத்தமா நினைவு நாள்.

அநுத்தமாவின் இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மநாபன்.ராஜேஸ்வரி பத்மநாபன், ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1922 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் தேதி பிறந்தார்.மெட்ரிகுலேஷன் வரை படித்த இவர், தனது சொந்த முயற்சியால் தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.12-ஆம் வயதிலேயே பத்மநாபன் என்பவரை மணந்தார்.தனது 22-வது வயதில் எழுதத்தொடங்கினார்.தான் எழுதிய முதல் சிறுகதையான "ஒரே ஒரு வார்த்தை'யை தன் மாமனாரிடம் படிக்கக் கொடுத்தார். அதைப் படித்துவிட்டு ""பலே'' என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி பாராட்டியவர், லலிதா சகஸ்ரநாமத்திலிருந்து, "அநுத்தமா' என்ற பெயரை தேர்வு செய்து, மருமகளுக்குப் புனைபெயராகச் சூட்டி மகிழ்ந்தார்.

மாமனார் புனைபெயர் சூட்டிய பிறகுதான் அநுத்தமா என்ற பெயரில் எழுதிக் குவிக்கத் தொடங்கினார் ராஜேஸ்வரி பத்மநாபன்.1950-60-களில் நடுத்தர குடும்பத்துப் பெண்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் விதமாக பல படைப்புகளை எழுதினார்.இவர், "தமிழ்நாட்டின் ஜேன் ஆஸ்டென்' என்றே புகழப்பட்டார்.இவர் எழுதிய  மணல் வீடு, ஒரே வார்த்தை, கேட்டவரம், மாற்றாந்தாய் போன்ற படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைப் போக்கும் நோக்கத்தோடு எழுதப்படுபவைதான் சமூகப் புதினங்கள்.இவ்வகைப் புதினங்கள் சமுதாயச் சிக்கல்கள், சீர்திருத்தங்கள், பிரசாரங்கள் என்னும் போக்குகளை அடிப்படையாகக் கொண்டவை. 
            
இவரது முதல் படைப்பான "அங்கயற்கண்ணி', கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது.அடுத்து கலைமகள் இதழ் நடத்திய போட்டியில் இவரது "மணல்வீடு' புதினம் முதல் பரிசு பெற்றது.இதன்பிறகு பல்வேறு இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளிவந்தன. அநுத்தமா எழுதிய கதைகள் அனைத்தும் குடும்பக் கதைகள். ஒவ்வொரு இல்லத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளைத்தான் அவை பிரதிபலித்தன.ஆங்கிலத்திலும் சிறந்த புலமை வாய்க்கப் பெற்றிருந்தார் அநுத்தமா. மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியவர்.தன் எழுத்துகளுக்குச் சிறப்பு சேர்த்த, வளர்த்த கி.வா.ஜகந்நாதன் மீது அநுத்தமாவுக்கு அளவுகடந்த பக்தியும் மரியாதையும் இருந்தது. கி.வா.ஜ., எல்லோரிடம் அநுத்தமாவை அறிமுகப்படுத்தும்போது "எனது தங்கை' என்று சகோதரப் பாசத்துடனேயே அறிமுகப்படுத்துவாராம்.    
            
1956-இல் இவர் படைத்த "பிரேமகீதம்' என்ற புதினம், தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் விருதைப் பெற்றது.ஒரே ஒரு வார்த்தை, வேப்பமரத்து பங்களா ஆகிய புதினங்கள் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.புனைவுக் கதைகளைத் தவிர, பறவை இனங்களைப் பற்றி ஆராய்ந்து, நான்கு புதினங்களைக் குழந்தை இலக்கியத்துக்கு நல்கியுள்ளார்.மோனிகா ஃபெல்டன் எழுதிய "ராஜாஜியின் வாழ்க்கை வரலாறு' என்ற ஆங்கில நூலை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள், 15-க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதிக் குவித்திருக்கிறார் அநுத்தமா.கேட்ட வரம்' என்ற நாவல், பாளையம் என்ற ஊரில் நடைபெறும் பஜனை சம்பிரதாய நெறி பற்றிக் கூறும் நாவல். இந்நாவலை காஞ்சி மகா பெரியவரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளே பாராட்டியுள்ளார்.

அநுத்தமாவின் "ஒரே ஒரு வார்த்தை' எனும் நாவல் மனோதத்துவ ரீதியில் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்ற பெருமைக்கும் புகழுக்கும் உரியதாயிற்று.சமையலுக்கும் நாவலுக்கும் அடுக்களையில் இருந்தே பாத்திரங்களை எடுக்கிறீர்களே'' என்று பாராட்டுவாராம் அகிலன்.ஆல மண்டபம், நைந்த உள்ளம், ஒன்றுபட்டால், ஜயந்திபுரத் திருவிழா, துரத்தும் நிழல்கள், சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு), மாற்றாந்தாய், முத்துச் சிற்பி, சுருதிபேதம், கௌரி, லட்சுமி, தவம், பூமா, ஒரே ஒரு வார்த்தை, ருசியான கதைகள், அற்புதமான கதைகள், பிரமாதமான கதைகள், படுபேஷான கதைகள், அழகான கதைகள் ஆகியவை இவருடைய பிற படைப்புகள். குடும்பத்துக்கும் எழுத்துக்கும் செழுமை சேர்த்த அநுத்தமா, 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 3 அன்று மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.