Breaking

டிசம்பர்-04, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பிறந்த நாள்...


டிசம்பர்-04, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் 
அவர்களின் பிறந்த நாள்...

பிறப்பு..


1910 ஆம் ஆண்டு டிசம்பர்-04 ஆ‌ம் தேதி தஞ்சை மாவட்டம் ராஜா மடத்தில் பிறந்தார்.இயற்பெயர் ராமசாமி வெங்கட்ராமன், ஆர்.வி என அழைக்க‌ப்பட்டவர். சென்னை பல்கலை‌க்கழகத்தில் பொருளியல் துறையில் பட்ட மேற்படிப்பும் சென்னை சட்டக்க‌ல்லூரியில் சட்ட‌ப்படிப்பும் முடித்தா‌ர்.பி‌ன்ன‌ர், 1935 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்திலும், 1951ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்ற‌த் தொடங்கியவர், காங்கிரஸ் பேரியக்கத்தில் சேர்ந்து இந்திய‌ சுதந்திர‌ப் போராட்டத்தில் பங்கேற்று 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் 2 ஆண்டுகள் சிறை‌த் தண்டனை பெற்றார்.

1950 முதல் 1957 முடிய நாடாளும‌ன்ற உறுப்பினராக இருந்தார்.1957 முதல் 1967 முடிய தமிழகத்தில் தொழில், தொழிலாளர் நலன், கூட்டுறவு, மின்சார‌ம், போக்குவரத்து ஆ‌‌‌கிய துறைகளுக்கு அமைச்சராக பணியாற்றினார்.1980 இல் இந்திரா காந்தி அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.4 ஆண்டுகள் நாட்டின் 7வது துணை‌க் குடியரசுத் தலைவராக‌ப் பணியாற்றி, 1987 ஜுலை 25 இல் இந்தியாவின் 8ஆவது குடியரசுத் தலைவராக‌ப்பொறுப்பேற்றார்.அப்பொழுது 1989இ‌ல் வி.பி.சிங்கையும், 1991 இல் சந்திரசேகரையும், அதையடு‌த்து ராஜிவ் காந்தியையு‌ம், பின்னர் பி.வி. நரசிம்மராவையும் பிரதமர்களாக‌ப் பதவி அமர்த்தினார். 

நாட்டின் 8வது குடியரசுத் தலைவராக கடந்த 1987 ஜூலை 25ஆம் தேதி பதவியேற்ற ஆர்.வெங்கட்ராமன், 1992ஜூலை 25ஆம் தேதி வரை அப்பதவியில் இருந்தார். அவர் தமது பதவிக்காலத்தில் வி.பி. சிங், சந்திர சேகர், ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ் என 4 பிரதமர்களை பதவியில் அமர்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைவு..

2009, ஜனவரி - 27 அன்று  மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.