Breaking

டிசம்பர்-06. மூத்த தலைமுறை எழுத்தாளரும், ‘கண்ணன்’ குழந்தைகள் பத்திரிகை ஆசிரியர்-R.V. - வெங்கட்ராமன் பிறந்த தினம்.

டிசம்பர்-06. மூத்த தலைமுறை எழுத்தாளரும், ‘கண்ணன்’ குழந்தைகள் பத்திரிகை ஆசிரியர்-R.V. - வெங்கட்ராமன் பிறந்த தினம். 

இவருடைய முதல் நாவல் 1942 இல் சுதேசமித்திரனில் பிரசுரமாகியது. தொடர்ந்து கல்கி, கலைமகள் எனப் பல பத்திரிகைகளில் அவரது எழுத்துக்கள் பிரசுரமாகின. சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்குமாக ஆர்.வி. எழுதிய பல கதைகள் மிகுந்த பாராட்டுதலைப் பெற்றன. 1946 இல் கல்கியைத் தலைவராகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதல் செயலாளராக ஆர்.வி. திகழ்ந்தார். 1960 இல் தி. ஜானகிராமன், கி.ரா., ந.சிதம்பர சுப்ரமணியன், தி.ஜ.ர., க.சோமசுந்திரம், நாரண துரைக்கண்ணன் ஆகியோரைக் கொண்டு தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தை உருவாக்கினார். 

சென்னையில் தேசிய பத்திரிகையாளர் சங்கத்தை உருவாக்கினார். இந்திய எழுத்தாளர் அமைப்பின் சென்னைக்கிளை உருவாகச் செயல்பட்டு, அதன் செயல் உறுப்பினராய்ப் பல காலம் பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் சில காலம் பணியாற்றியிருக்கிறார். தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசு என்று பல பாராட்டுகளைப் பெற்று உள்ளார்.

No comments:

Powered by Blogger.