Breaking

டிசம்பர் - 09. தமிழகக் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்கள் மறைந்த தினம் பற்றிய தகவல்கள் அறிந்து கொள்வோம்..


டிசம்பர் - 09. தமிழகக் கவிஞர் வெ.இராமலிங்கம் அவர்கள் மறைந்த தினம் பற்றிய தகவல்கள் அறிந்து கொள்வோம்..

பிறப்பு..

நாமக்கல் கவிஞர் வெங்கட்ராமன் பிள்ளை, அம்மணி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.நாமக்கல்லில் ஆரம்பக் கல்வியையும் ஹூபர் கல்லூரியில் கல்லூரிக் கல்வியை முடித்தார். இளமையிலேயே ஓவியங்கள் வரைவதில் வல்லவர். வட்டாட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக சில காலமும், பள்ளி ஆசிரியராக சில காலமும் பணியாற்றினார்.

தேசிய கவி

இவர் 1930 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகத்தின் பொழுது கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற பாடலைப் பாடி தேசியகவி என பாராட்டப்பட்டார். இவர் தேசியம், காந்தியம் பற்றி ஏராளமான கவிதைகளை எழுதியவர். 

நூல்கள்..

இவர் எழுதிய புதினங்கள் ஐந்து, நாடகங்கள் இரண்டு,  கவிதை நூல்கள் 15, கட்டுரைகள் 14, ஆராய்ச்சி நூல்கள் ஏழு, வாழ்க்கை வரலாற்று நூல்கள் மூன்று, இசை பற்றிய நூல்கள் 2, மொழிபெயர்ப்பு நூல்கள் இரண்டு, திருக்குறள் புது உரை ஒன்று ஆகும். இவர் எழுதிய மலைக்கள்ளன் கதையை திரைப்படமாக்கப்பட்டது. 

விருதுகள்

அழகு 1971 ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூஷன் பட்டத்தை வழங்கி இந்திய அரசு கௌரவித்தது.இவர் எழுதிய தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற வரிகள் தமிழர்கள் நெஞ்சில் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

No comments:

Powered by Blogger.