Breaking

டிசம்பர் - 10. காலிபோர்னியம் தனிமம் அமெரிக்க வேதியியலாளர்- கென்னத் ஸ்ட்ரீட் பிறந்த தினம்.


டிசம்பர் - 10. காலிபோர்னியம் 
தனிமம் அமெரிக்க வேதியியலாளர்-
கென்னத் ஸ்ட்ரீட் பிறந்த தினம்.

கலிபோர்னியாவில் உள்ள பெர்க்லியில் டிசம்பர்-10,1920 ஆம் ஆண்டு பிறந்தார். 1943 ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய வேதியியல் பட்டத்தைப் பெற்றார். இரண்டாம் உலகப்போரில் வான் பதக்கம் மற்றும் புகழ்பெற்ற பறக்கும் சின்னம் போன்ற பெருமைகளுடன் போர் விமானியாகப் பணியாற்றினார்.போருக்குப் பின் இவர் பெர்க்லிக்குத் திரும்பி அணுக்கரு வேதியியலில், 1949 ஆம் ஆண்டு தன்னுடைய முனைவர் பட்டத்தைப் பெற்றார். 
அமெரிசியம் மற்றும் கியூரியம் தனிமங்களின் ஓரிடத்தான்கள் என்பது இவருடைய முனைவர் பட்ட ஆய்வுகான தலைப்பாகும்.

லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகதில்,1949 ஆம் ஆண்டு 97 வது தனிமம் பெர்க்கிலியம் மற்றும் 1950 ஆம் ஆண்டு 98 வது தனிமம் 
காலிபோர்னியம் முதலியவற்றைக் கண்டுபிடித்த அறிவியலாளர் குழுவில் இவரும் உறுப்பினராக இருந்தார்.  அப்பொழுது இவருடன் சிடான்லி செரால்டு தாம்சன், கிளென் தியோடர் சீபோர்க்கு, மற்றும் ஆல்பர்ட் கெயோர்சோ ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்று ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள். மேலும் இவர், அணுக்கரு வேதியியல், 
புவிவெப்ப ஆற்றல், புவி வேதியியல் போன்ற துறைகளில் ஆர்வமும் நாட்டமும் மிகுந்திருந்ததால் அவற்றிலும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள தொடங்கினார். நாளடைவில் லாரன்ஸ் பெர்க்லி தேசியஆய்வகத்தின் இணை இயக்குநராகவும் தொடர்ந்து வேதியியல் பேராசிரியர் ஆகவும் பதவி உயர்வு பெற்றார். 1986 ஆம் ஆண்டில் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர்,
மார்ச்-13,2006 ஆம் ஆண்டு  கலிபோர்னியாவில் உள்ள பாரடைசு நகரில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.