Breaking

டிசம்பர் -10. ஆல்பிரட் நோபல் நினைவு தினம். பற்றிய சிறப்பு தொகுப்பு.


டிசம்பர் -10. ஆல்பிரட் நோபல் நினைவு தினம்..

நோபல் பரிசின் பிதாமகன் ஆல்பிரட் பெர்ன்ஹார்ட் நோபல், இந்த மண்ணுலுகை விட்டுப் பிரிந்தது இன்றைய தினத்தில் தான். சுவீடனில் பிறந்த நோபல், டைனமைட் வெடிபொருளை கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். இந்த வருவாய் மூலம் போபர்ஸ் என்னும் மிகப்பெரிய ஆயுத உற்பத்தி நிறுவனத்தை நிறுவி மிகப்பெரிய கோடீஸ்வரரானார். இவரது பொருளாதார வளர்ச்சி, ஆயுதப்போட்டிக்கு வித்திட்டதாகவும், உலகை அழிவுக்குக் கொண்டு சென்றதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் மனம் வருந்திய நோபல், தான் ஈட்டிய சொத்து முழுவதையும் நோபல் பரிசு வழங்க பயன்படுத்த வேண்டும் என உயில் எழுதினார். 

இதற்காக நார்வே நோபல் கழகம் என்னும் அறக்கட்டளையை ஏற்படுத்திய நோபல், இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நோபல் பரிசு அளிக்க பரிந்துரைத்தார். கடந்த 1896-ஆம் ஆண்டு இதே தினத்தில், புற்று நோய் பாதிப்பால் தமது 63-வது வயதில் நோபல் உயிரிழந்தார். இதனையடுத்து, நோபல் இறந்த நாளான டிசம்பர் 10-ஆம் தேதி, ஆண்டுதோறும் நோபல் பரிசளிப்பு விழா நடைபெறுகிறது

No comments:

Powered by Blogger.