Breaking

டிசம்பர் - 11 . பன்னாட்டு மலைகள் நாள் (International Mountain Day) பற்றிய சிறப்பு தொகுப்பு...


டிசம்பர் - 11 . பன்னாட்டு மலைகள் நாள் (International Mountain Day) பற்றிய சிறப்பு தொகுப்பு...

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 11 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பன்னாட்டு மலைகள் நாளை ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு முன்னின்று நடத்து வருகிறது.மலைகளைப் பாதுகாக்கவும்,மலைப்பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், மலையின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், 2002ஆம் ஆண்டில் மலைகளின் கூட்டாளி என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு உலகம் முழுவதும் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பின் முயற்சியால் 2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை டிசம்பர் 11 ஆம் நாளை பன்னாட்டு மலைகள் நாளாக அறிவித்தது.உயிரினங்களின் வாழ்க்கையில் மலைகள் பிரதான வகிபாகத்தினைப் பெறுகின்றன. மலைகள், உலகத்திற்கு தேவையான தூய நீரினை அதிகபட்சமாக வழங்குவதுடன், மேலும் பல்வேறு வகையான தாவரங்களினதும், விலங்குகளினதும் பிரதான கேந்திர நிலையமாக விளங்குவதுடன், மனிதனின் வாழிடமாகவும் விளங்குகின்றன. காலநிலை மாற்றங்கள், சுற்றுச்சூழல் மாசடைதல், வெடிப்பு நடவடிக்கைகள், ஆயுத மோதல்கள் இன்ன பிற காரணங்களினால் மலைகள் பிரதான பாதிப்பினை எதிர்நோக்குகின்றன.
இது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்ச்சியினை ஏற்படுத்துவதற்காக வருடாந்தம் டிசம்பர் மாதம் 11ம் நாள் உலக மலைகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

இந்தியாவின் மிக உயரமான மலை உத்தரா காண்டத்தில் அமைந்துள்ள நந்தா தேவி மலை (7816 மீ) ஆகும். ஏனெனில் 8586
மீ உயரமுடைய கன்சென்ஜுங்கா மலை இந்திய | நேபாள எல்லையில் அமைந்துள்ளது.

No comments:

Powered by Blogger.