Breaking

டிசம்பர்-13..கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கிய வேதியியல் அறிஞர்-பிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு இறந்த தினம்.


டிசம்பர்-13..கரிமச் சேர்மங்கள் பலவற்றை உருவாக்கிய வேதியியல் அறிஞர்-பிரான்சுவா அகஸ்தே விக்டர் கிரின்யார்டு இறந்த தினம்.

பிரான்ஸின் செர்போர்க் நகரில் மே-06, 1871 ஆம் ஆண்டு பிறந்தார். 
தான் பிறந்த ஊரில் உள்ள பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், உதவித்தொகை பெற்று, எகோலே நார்மலே சிறப்பு பள்ளியில் பயின்றார். பிறகு லியோனில் படிப்பைத் தொடர்ந்து, பட்டம் பெற்று,அதே பல்கலைக்கழகத்தில் உதவி ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார்.கரிம வேதியியலின் தந்தை எனக் கருதப்படும் பிரபல விஞ்ஞானி பிலிப் பார்பியரோடு இணைந்து  தனது முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். செறிவூட்டப்படாத ஹைட்ரோகார்பன் உள்ளிட்டவை தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டார். முனைவர் பட்ட ஆய்வில் மெக்னீசியம் கரிமக் கலவைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார். இந்தக் கலவைகளின் எதிர்வினைகள் மூலம் ஆல்கஹால், அமிலம், ஹைட்ரோகார்பன் தயாரிப்பு குறித்து விவரித்தார்.
இந்த ஆய்வு பின்னர் கரிமத் தொகுப்புகள் (Organic Synthesis) தொடர்பான ஆய்வுகள், கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது. மேலும், ஆர்கனோமெக்னீசியம் கலவைகள் குறித்த இவரது கண்டுபிடிப்புகள், வேதியியலில் கரிமத் தொகுப்பு என்ற பரந்த களத்தைத் திறந்துவிட்டது. ‘கிரிக்னார்டு எதிர்வினை’ (Grignard Reaction) என இவரது பெயரில் வழங்கப்படும் செயற்கை எதிர்வினையை 1900-ல் கண்டறிந்தார். இதற்காக, 1912-ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கும், இன்னொரு பிரெஞ்ச் விஞ்ஞானியான பால் செபாட்டியருக்கும் இணைந்து வழங்கப்பட்டது. கரிமச் சேர்மங்கள் தயாரிக்க இவரது கிரிக்னார்டு எதிர்வினை முக்கிய வழிமுறையாகப் பின்பற்றப்படுகிறது. ரசாயனத் தாக்குதலுக்குப் பயன்படும் மஸ்டர்ட் எரிவாயுவைக் கண்டறிந்தார்.
 
மெக்னீசியத்தைப் பயன்படுத்தி கார்பன் - கார்பன் பிணைப்புகளை உருவாக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தார். கீட்டோன்கள், ஆல்டிஹைடுகளின் செறிவூட்டப்படாத கலவைகள், செறிவூட்டப்பட்ட கலவைகளில் ஓசோனேஷன் குறித்து ஆராய்ந்தார். வினையூக்க ஹைட்ரஜன், டிஹைட்ரோஜனேஷன் வழிமுறைகள், அலுமினியம் குளோரைட்டில் ஹைட்ரோகார்பன்கள் உடைதல், செறிவூட்டப்படாத கலவைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆராய்ந்தார். நான்சி பல்கலைக்கழகத்தில் 1910-ல் பேராசிரியராகப் பணியாற்றினார்.கரிம வேதியியல் தொடர்பாக பல நூல்கள் எழுதினார். தனது ஆராய்ச்சிகள் குறித்து 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள், குறிப்புகளை எழுதினார். 1912 - க்ரிக்னார்ட் ரஜெண்ட்டை கண்டுபிடித்ததற்காக வேதியியல் நோபல் பரிசு (சக பிரஞ்சு உறுப்பினர் பால் சபாட்டிஜருக்கு இந்த விருது வழங்கப்பட்டது).
பெர்த்தலோட் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள்ளார். நோபல் பெற்ற பிரான்ஸ் வேதியியல் அறிஞரான இவர், டிசம்பர்-13, 1935 ஆம் ஆண்டு,பிரான்சில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.