டிசம்பர் - 15. இந்தியத் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் - டி.என்.சேஷன் பிறந்த நாள்..
டிசம்பர் - 15. இந்தியத் தேர்தல் சீர்திருத்தங்களுக்கு வித்திட்ட முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் - டி.என்.சேஷன் பிறந்த நாள்..
டி. என். சேஷன், 15 டிசம்பர் 1932 ஆம் ஆண்டு பிறந்தார். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக டிசம்பர் 12, 1990 முதல் டிசம்பர் 11, 1996 வரை பொறுப்பேற்றவர். இந்த காலகட்டத்தில் அவர் தேர்தல் தில
கட்டுப்படுத்துவதில் எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் பெரிதும் அறியப்படுகிறார். சுதந்திர இந்தியாவின் 10வது தலைமை தேர்தல் ஆணையராக செயல்பட்ட சேஷன் தனது கராறான அணுகுமுறையால் பிரபலமடைந்தார். சேஷன் தேர்தல் ஆணையராக ஆன பிறகே தேர்தல் ஆணையத்தின் வலிமையும், இருப்பும் பெரிதாக உணரப்பட்டது.
தேர்தலில் வாக்களிக்க வாக்காளரின் புகைப்படம் கொண்ட அடையாள அட்டை முறையை 1993 ல் கொண்டுவந்தவர் சேஷன். 1990 முதல் 1996 வரை தலைமை தேர்தல் ஆணையராக இருந்த சேஷன் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர், பிரசாரங்கள் நிறுத்தப்படவேண்டும், தேர்தல் அன்று, வாக்குச் சாவடிக்கு அருகில் பிரச்சாரம் நடத்தக்கூடாது போன்ற விதிகளை கடுமையாக அமல்படுத்தினார்.
தேர்தல் காலத்தில் நடைபெறும் வன்முறைகளை தனது கராறான நடவடிக்கைகள் மூலம் வெகுவாகக் குறைத்தவர் சேஷன். 1996ல் ரமோன் மகசேசே விருது பெற்றார்.அவர் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நவம்பர் 10, 2019 அன்று 86 வயதில் காலமானார். அவரது மறைவை முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ். வை. குரைஷி அறிவித்தார்.
No comments: