Breaking

மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே சென்று செல்ஃபி எடுக்கலாம். சிந்தனை தூண்டும் கதை



மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே சென்று செல்ஃபி எடுக்கலாம். சிந்தனை தூண்டும் கதை

எதேனும் சிறு குறைபாடுகள் இருந்தால்கூட அதை சுட்டிக்காட்டி தனது தோல்வியையோ, சோம்பேறித்தனத்தையோ நியாயப்படுத்தும் மக்கள் நம்மைச்சுற்றி ஏராளம் ஏராளம். உண்மையை கூறவேண்டும் என்றால் எதையாவது சாதிக்க வேண்டும் எனும் தாகம் இருப்பவர்களுக்கு உடலில் உள்ள குறைபாடு ஒரு பொருட்டே அல்ல...

"இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை". மனிதனும் அது போலத்தான். ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து தோற்றத்தில், குணத்தில், திறமைகளில் என எல்லா வகையிலும் வேறு படுகின்றனர்..

குறைகள் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கத்தான் செய்கின்றன. அதை பெரிதாய் நினைத்து வருந்துகிறவர் உலகையே வெறுத்துப்போய்  பார்க்கிறார், அதை உடைத்து எழுபவர் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறார்.உலகத்தில் இயல்பான மனிதர்கள் படைக்கும் சாதனையைவிட உடல் குறைபாடு உள்ளவர்கள்  பல அரும் பெரும் சாதனைகள் படைத்து உள்ளார்கள். தங்கள் உடல் உள்ள குறைகளை துச்சமாய் மிதித்து, வாழ்க்கை என்னும் சமுத்திரத்தில் எதிர்நீச்சல் அடித்து உலகின் பார்வையை தங்கள் மீது திருப்பிய பலரை உலகில் காணலாம். ஹெலன் ஹெல்லர் என்னும் மேல்நாட்டு எழுத்தாளர் தன் சிறு வயதில் வந்த மர்மக் காய்ச்சலால் பேசும் திறனையும் கேட்கும் திறனையும் இழந்தார்...

தடையை வென்று சைகை மொழியைக் கற்றுக் கொண்டு பல நூல்களை எழுதி, எழுத்தாளராக நாற்பது நாடுகளுக்குப் பயணித்த சொற்பொழிவாளராக தன்னை மாற்றிக் கொண்டார்.சாதனைகள் படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்குச் சான்றாய் பலரில் இவரும் ஒருவராக திகழ்ந்தார்...

ஆம் நண்பர்களே...!

🔴 இவர்கள் மட்டுமல்ல இவர்கள் போல பலரும் தங்கள் உடல் உறுப்புகள் பழுதுபட்டு இருந்தாலும், தங்களின் உள்ளம் உறுதியால் பல சோதனைகளை சாதனைகளாக மாற்றியுள்ளனர். தனக்கு உடல் குறைபாடு உள்ளது என்று நினைக்காமல், தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று நினைக்கும் போது தன்னுள் இருக்கும் திறமை ஊற்றெடுக்கும்...!

⚫ ஆம்!, ஒவ்வொரு நரம்பிலும் நம்பிக்கை வேரூன்றியிருக்க வேண்டும். மனம் திடமாய் இருந்தால் போதும் செவ்வாய் கிரகத்திற்கே சுயமி (செல்ஃபி) எடுக்கச் செல்லலாம்...!!

No comments:

Powered by Blogger.