Breaking

ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும் .. சிந்தனையை தூண்டும் கதை



ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும் .. சிந்தனையை தூண்டும் கதை

காட்டுக்குள் மேய சென்ற ஒரு மாடு புலி ஒன்று தன்னை நோக்கி வருவதை  பார்த்து பயத்தில் ஓட  ஆரம்பிக்க அந்த புலியும் அதனை துரத்தியது.

ஓடும் மாடு முன்னால் ஒரு குளத்தைக் கண்டது. பயந்துபோன மாடு குளத்துக்குள் நுழைந்தது.

புலியும் அதனை பின்தொடர்ந்து குளத்திற்குள் நுழைந்தது. அந்த குளம்  ஆழமாக இல்லை, சிறு நீருடன் சேறு நிரம்பியிருந்தது.

சேற்றில் சிக்கிய புலியால்
எதுவும் செய்ய இயலவில்லை.  அருகில் மாடு இருந்தபோதும் அதனை பிடிக்க  முடியவில்லை.

மாடு புலியு இரண்டும் மெதுவாக சேற்றுக்குள் மூழ்க ஆரம்பித்துவிட்டன கிட்டத்தட்ட கழுத்து வரை .

சிறிது நேரம் கழித்து, மாடு புலியைக் கேட்டது,

மாடு: உனக்கு  உரிமையாளர் இருக்கிறாரா?

புலி: இல்லை. நானே இந்த காட்டின் ராஜா உரிமையாளன்.

மாடு: ராஜாவா இருந்து என்ன பலன்? நீயும் என்னைப் போல மாட்டிக்கிட்டு இருக்க.

புலி:   உங்கிட்ட மாஸ்டர் இருந்தாலும் உன் நிலை என்னுப்போலவே  சேற்றில் சாகப்போற.

மாடு: இல்லவே இல்லை. என் எஜமானர் மாலையில் வீட்டில் என்னை தேடிவார். நிச்சயமாக என்னைத் தேடி இங்கு வந்து என்னை இந்த சேற்றிலிருந்து மீட்டு வீட்டிற்கு அழைத்துச் செல்வார். உங்களை யார் அழைத்துச் செல்வர்?

சிறிது நேரத்தில், ஒரு மனிதன் அங்கு வந்து மாட்டை சேற்றிலிருந்து மீட்டு தன் வீட்டிற்கு அழைத்து சென்றான்

மாடு மற்றும் அதன் உரிமையாளர் இருவரும் நன்றியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

ஆனால் மாடு மனிதன் இருவரும் புலியை சேற்றில் இருந்து மீட்க முடியவில்லை, ஏனெனில் புலி அவ்விருவரின் உயிருக்கு ஆபத்து.

மாடு - அர்ப்பணிப்புள்ள இதயத்தின் சின்னம்.

புலி - இறுமாப்புள்ள மனம்.

உரிமையாளர் - கடவுளின் சின்னம்.

மண் - இதுதான் உலகம்

நான் தான் எல்லாம், எனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை என்ற ஆணவம், அழிவின் விதையை விதைத்துவிடும்.

No comments:

Powered by Blogger.